ஆப்பிளோட iPad உற்பத்தி செய்யுற கம்பெனி, ஒரு சீனக்கம்பனி(!). நாம கேவலமா நினைக்குற சீனா தயாரிப்பதான் உலகின் முதல் ஸ்மார்ட்போன் நிறுவனமான ஆப்பிள் தன்னோட தயாரிப்புகளுக்கு உபயோகப்படுத்துது. ஆனா இப்போ அந்த கம்பனிகாரன் நம்ம ஆப்பிளுக்கே "ஆப்பு" வச்சுட்டான்.
என்னதான் நடந்தது? : ஆப்பிளிடம் உரிமத்தை விற்ற அந்த கம்பனி , இப்போ அது செல்லாதுன்னு சொல்லுது. காரணம்,பாழாய்ப்போன "பணம்". இதுக்கு அந்த சீனக்கம்பனியோட வழக்கறிஞர் என்ன சொல்றார்னா, இந்த விஷயத்த நீதிமன்றத்துக்கு போய் முடிக்கறத விட,இரண்டு கம்பனிகளும் "சமரசமா" போய்டலாம்னு சொல்றார். அவங்க மொழில சமரசம்னா அதே "பாழாய்ப்போன" விஷயம்தான்.
இந்த நிலையில் சீனாவில் iPad விற்பனையை தடை செய்ய சொல்லி அந்த நிறுவனம் கேட்டு உள்ளது.ஆனால் இது வரை விற்பனை நிறுத்தப்படவில்லை.
முடிவு : ஆப்பிள் இந்த வழக்கில் ஜெயிக்கும் வாய்ப்பு அதிகமாக உள்ளது. காரணம் அதன் மிக நேர்மையான உரிமம் பெரும் முறை. ஸ்டீவ் ஜாப்ஸ் இறந்து சில மாதங்களே ஆன இந்த நிலையில் ஆப்பிளுக்கு இப்படி ஒரு சோதனை.

0 comments:
Post a Comment